குவாந்தான், ஜூலை.15-
பகாங் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் வண்டியுடன் மோதியதில் இருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பகாங், ஜாலான் கம்பாங்கில் பாயா பெசார் தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.
குவாந்தான், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவனையிலிருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வண்டி, புக்கிட் ராஙினை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அடில் மாட் டாவுட் தெரிவித்தார்.








