Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர் ஒருவர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

மலேசியர் ஒருவர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்

Share:

யாலா, மே.27-

விடுமுறையைக் கழிப்பதற்கு தாய்லாந்து, யாலா மாநிலத்தில் பெத்தோங் நகருக்குச் சென்றிருந்த மலேசியர் ஒருவர், ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 67 வயதுடைய அந்த நபர், நேற்று காலையில் ஹோட்டல் அறைக்குள் இறந்து கிடந்ததைக் கண்ட ஹோட்டல் பணியாளர், போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக பெத்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஜக்காரின் லக்சானா தெரிவித்தார்.

Related News