Nov 5, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 7.5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – கல்வி வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் 21 தமிழ்ப்பள்ளிகளுக்கு மித்ரா மூலம் 7.5 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு – கல்வி வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை

மலாக்கா மாநிலத்திலுள்ள 21 தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வசதிகளை மேம்படுத்த, மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 390 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, பள்ளிகளுக்கான தளவாட உதவி, திறன்மிகு மின்னணுப் பலகைகள் மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டமான கல்வி மடானி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் உள்ள லாடாங் ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளியில் இன்று மேற்கொள்ளப்பட்ட பணி நிமித்தமான வருகையின்போது டத்தோ ஸ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் இலக்கமுறைத் திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மெடியா மூலியா நிறுவனத்தின் கீழ் இயங்கும் உத்துசான் மலேசியா மற்றும் கோஸ்மோ! நாளிதழ்களைச் சேர்ந்த வேலை பாதிக்கப்பட்ட 100 ஊழியர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கெசோ மூலம் ஆறு மாதங்கள் வரை நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மைஃபுயூச்சர்ஜாப்ஸ் (MYFutureJobs) வேலை வாய்ப்பு இணையத்தளத்தில் மலேசியர்களுக்காக சுமார் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் ரமணன் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சமூக ஊடகங்களில் வைரலாகும் கொடூர வீடியோ: தலையில் ரப்பர் குழாயினால் தாக்கப்பட்ட முதியவர் பலி – ஆடவர் கைது

சமூக ஊடகங்களில் வைரலாகும் கொடூர வீடியோ: தலையில் ரப்பர் குழாயினால் தாக்கப்பட்ட முதியவர் பலி – ஆடவர் கைது

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகம்: 2024 முதல் வெளிநாடுகளில் 213 மலேசியர்கள் கைது

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகம்: 2024 முதல் வெளிநாடுகளில் 213 மலேசியர்கள் கைது

வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது பேங்க் நெகாரா மலேசியா

வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது பேங்க் நெகாரா மலேசியா

தீபாவளியை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் தினமும் 32.8 இலட்சம் வாகனங்கள்

தீபாவளியை முன்னிட்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் தினமும் 32.8 இலட்சம் வாகனங்கள்

ரோன்95 பெட்ரோல் விவகாரம்: பழுந்தடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கிய கால்டெக்ஸ், பெட்ரோன்

ரோன்95 பெட்ரோல் விவகாரம்: பழுந்தடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கிய கால்டெக்ஸ், பெட்ரோன்

மலாக்கா தேர்தல் பிரச்சாரக் களத்தில் நாளை அன்வார்: ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

மலாக்கா தேர்தல் பிரச்சாரக் களத்தில் நாளை அன்வார்: ஒரே நாளில் 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்