தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உச்சப் போக்குவரத்து நாளில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளை நாளொன்றுக்கு 32.8 இலட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை இயக்குநர் முஹமட் ஹாட்ஸிர் யுசோஃப் இதனைத் தெரிவித்தார். இன்று முதல் கிழக்கு கரையோர மாநிலங்கள் , வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பிளஸ் நெடுஞ்சாலை வலையமைப்பில் 22.4 இலட்சம் வாகனங்களும், டுக் (DUKE) நெடுஞ்சாலையில் 2 இலட்சத்து 88 ஆயிரம் வாகனங்களும் பயணிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் முதலாம் வகுப்பு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தில் சுமார் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படவுள்ளது.








