Nov 5, 2026
Thisaigal NewsYouTube

வீட்டில் உறங்குவதாக நினைத்த பெற்றோர் - 6 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீட்டில் உறங்குவதாக நினைத்த பெற்றோர் - 6 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஜோகூர் மாநிலம் கூலாயில் உள்ள தாமான் சுங்கை மாஸ் பகுதியில், குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் அருகே உள்ள மழைநீர் சேகரிப்புக் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் டான் செங் லீ தெரிவித்துள்ளார்.

சிறுவன் தனது வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள அந்தக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவனின் பெற்றோர் நேற்று காலை 6.30 மணியளவில் வேலைக்குச் செல்லும் போது அச்சிறுவனும் அவரது 17 வயது சகோதரியும் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இதற்கிடையே, காலை 10 மணியளவில் சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கிடப்பதாகத் தெரிந்த ஒருவர், அவரது தாயாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு அருகே மீன்பிடிக்கும் தூண்டிலும் கண்டெடுக்கப்பட்டதாக டான் செங் லீ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வீட்டில் உறங்குவதாக நினைத்த பெற்றோர் - 6 வயது சிறுவன் குள... | Thisaigal News