காஜாங்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், மசாஜ் நாற்காலியைப் பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் பொய்யானது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் யுசோஃப் கூறுகையில், அது போன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த பொய்யான தகவலைக் கொண்ட முகநூல் பதிவு குறித்து, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் 233-ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டதாக குற்றவியல் சட்டம், 505(b) பிரிவின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.








