மலாக்காவில் நாளை பக்காத்தானின் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட 5 முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார்.
நாளை பிற்பகல் 2.30 மணிக்கு யுடெம் (UTeM) பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 2026-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் தங்கக் கர விருது என்றழைக்கப்படும் விருது விழா ஒன்றில் அன்வார் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.45 மணியளவில் தாமான் புக்கிட் ரம்பாய் பகுதியில் நடைபெறும் மலாக்கா மாநில மடானி லட்சியப் பயண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதனையடுத்து, இரவு 7.30 மணியளவில் டேவான் பே ஃபோங்கில் நடைபெறும் ‘மாலாம் ஹராப்பான்’ நிகழ்ச்சியிலும், இரவு 8.30 மணியளவில் பாயா ரும்புட் தொகுதியில் நடைபெறும் ‘மாலாம் ரமா மெஸ்ரா மலாக்கா ரூமா கித்தா பெர்சாமா பிஎம்x’ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இறுதியாக இரவு 9.30 மணியளவில் பெரிங்கிட் பகுதியில் நடைபெறும் ‘சினார் தீபாவளி ஹராப்பான்’ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தனது மலாக்கா பயணத்தை நிறைவு செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








