2024ஆம் ஆண்டு முதல் 2026 செப்டம்பர் வரை, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் நபர்களாகச் சந்தேகிக்கப்பட்டு வெளிநாடுகளில் 213 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளைக் குறிவைத்து, அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள், சுற்றுலாப் பயணங்கள், விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் பணப் பரிசுகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அவர்களைச் சிக்கவைத்து வருவதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், போலிக் கணக்குகள், ரகசியத் தகவல் பரிமாற்றக் குழுக்கள், மின்னணுப் பணப்பைகள் மற்றும் கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தடுக்க, அரச மலேசிய போலீஸ் படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் இணைந்து 24 மணி நேர இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்று ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.








