Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஏழுமலையான் பிரசாதத்தின் புனிதத்தன்மை காக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏழுமலையான் பிரசாதத்தின் புனிதத்தன்மை காக்கப்படும்

திருப்பதி, செப்டம்பர் 21-

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிப்பதற்காக நெய்யிற்கு பதிலாக பன்றி கொழுப்பு, செம்பனை எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிப்படையாக குற்றம்சாட்டி இருந்ததைத் தொடர்ந்து கலக்கம் அடைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் மிக மிக குறைவாக இருப்பதும் தெரிய வந்ததைத் தொடர்ந்து லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையைக் காக்க நெய்யின் தரத்தை உயர்த்துவதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை தேவஸ்தானம் அமைத்துள்ளதாக அதன் தலைவர் E.O. ஷியாமளா ராவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சுத்தமான பசும் நெய்யின் தரத்தை உயர்த்துவதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். எங்களின் உள்கட்டமைப்பை பலப்படுத்தி உள்ளோம். இது போன்ற பிரச்சனைகள் இனி வராமல் தடுக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

நெய்யின் தர பரிசோதனையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து மட்டுமே நெய் பெறுவதற்கு திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

நிபுணர்களிடம் எங்களுக்கென பிரத்யேக நெய்யின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகங்களை ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தீர்க்கப்படும்.

இந்த விவகாரத்தினால் ஏழுமலையான் பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர் என்பதை தேவஸ்தானம் உணர்ந்த போதிலும் ஏழுமலையான் லட்டு பிரசாதத்தின் புனித்தன்மை எல்லா நிலைகளிலும் காக்கப்படும் என்பதற்கு தாங்கள் உத்தரவாதம் அளிப்பதாக E.O. ஷியாமளா ராவ் உறுதி அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →