தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது பொதுமக்களைத் தூண்டியதாகக் கூறப்படும் 30 வயது சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், புத்ராஜெயா டத்தாரான் புத்ராஜெயாவில் தேசிய தின அணிவகுப்பைக் காண பொதுமக்கள் காத்திருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இருக்கைகளைப் பிடிப்பதற்காக தடுப்புகளைத் தாண்டிச் செல்லுமாறு அந்த நபர் கூட்டத்தினரைத் தூண்டியதாகவும், இதனால் முன்பகுதியில் இருந்த கூட்டம் திடீரென முன்னோக்கி நகர்ந்து நெரிசல் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் சிலர் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஐந்து போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறச் சட்டை அணிந்திருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றவியல் சட்டம், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.








