Sep 15, 2026
Thisaigal NewsYouTube
18 வயது இளைஞர் பலி… ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

18 வயது இளைஞர் பலி… ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, ஜாசின் அருகே கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் 18 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 41 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

நூரிஹ்மால் பஹாருதீன், என்ற அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9.15 மணியளவில் ஜாசின், கம்போங் ஆயர் மெர்பாவ் – சாலையில் சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் ஆம்புலன்ஸை கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் 18 வயது அமிருல் அஷ்ராஃப் அஸிசான் என்பவர் உயிரிழந்தார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் மற்றும் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படலாம்.

அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க அரசுத் தரப்பு 8 ஆயிரம் ரிங்கிட் பிணை கோரிய நிலையில், ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை நிர்ணயித்ததுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் இடைநீக்கம் செய்தது.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்