Apr 4, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மற்றும் சபாவில் அதிரடி சூதாட்ட வேட்டை: 67 பேர் கைது

Share:

சிலாங்கூர் மற்றும் சபாவில் கடந்த இரு தினங்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூரின் ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் கிள்ளான் பகுதிகளில் 52 பேரும், சபாவின் கோத்தா கினபாலு, தாவாவ் மற்றும் சண்டக்கான் பகுதிகளில் 15 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 26 பேர் வெளிநாட்டினர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

சோதனையின் போது 95 95 டேப்லெட்டுகள், 17 மடிக்கணினிகள், 38 கணினிகள் மற்றும் சுமார் 16 ஆயிரத்து 500 ரிங்கிட் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

குடும்ப பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) மையங்கள் என்ற பெயரில் முறையான உரிமம் இன்றி மறைமுகமாக இந்தச் சூதாட்ட விடுதிகள் இயங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்தார்.

Related News

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன