கோலாலம்பூர், டிசம்பர்.20-
மலேசியாவிற்கான தற்போதைய அமெரிக்கத் தூதர் Edgard D. Kagan, வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.
அவர் அமெரிக்க வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக மலேசிய அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
Edgard D. Kagan நுக்குப் பதிலாக, ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க அரசியல் வர்ணனையாளரான Nick Adams என்பவரைப் புதிய தூதராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளார்.
Edgard D. Kagan, கடந்த 2024 மார்ச் மாதம் மலேசியாவில் தனது பொறுப்புகளை ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்கிறார்.








