Sep 26, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்தை எதிர்கொள்ள ஜோலோ மலேசியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் - அமைச்சர் பாஃமி ஃபாசில் கருத்து
தற்போதைய செய்திகள்

சட்டத்தை எதிர்கொள்ள ஜோலோ மலேசியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் - அமைச்சர் பாஃமி ஃபாசில் கருத்து

Share:

தலைமறைவாக உள்ள மலேசிய நிதியாளர் லோ டேக் ஜோ எனப்படும் ஜோ லோவுக்கு மன்னிப்போ கருணையோ வழங்கக்கூடாது என்றும், அவர் மலேசியாவுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு, சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக 1எம்டிபி சிறப்பு பணிக்குழுத் தலைவர் ஜோஹாரி அப்துல் கானி வெளியிட்ட கருத்தை ஆதரித்த பாஃமி ஃபாசில் , ஜோ லோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் மிகப் பெரிய அளவிலானது என்பதால் அவ்வளவு எளிதில் அதனைப் புறக்கணித்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முக்கிய மூளையாக குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய ஜோ லோ, அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப்பிடம் பொதுமன்னிப்பு கோரியுள்ளார்.

அண்மையில், அமெரிக்க நீதித்துறையான டிஓஜேவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், லோ டேக் ஜோ இவ்வாண்டின் தொடக்கத்தில், டிரம்பிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாதிக்கவில்லை என்றாலும், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தகவல் அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாஃமி ஃபாசில் தெரிவித்துள்ளார்.

Related News

சட்டத்தை எதிர்கொள்ள ஜோலோ மலேசியாவுக்கு மீண்டும் கொண்டுவரப... | Thisaigal News