Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சக நாட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக இந்திய பிரஜைக்கு 38 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

சக நாட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக இந்திய பிரஜைக்கு 38 ஆண்டுகள் சிறை

Share:

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முதியோர் இல்லத்தில் சக நாட்டவரை தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக ஓர் இந்திய பிரஜைக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க Shah Alam உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சக நாட்டை சேர்ந்த Sugan Ganesan என்பவரை கொலை புரிந்த குற்றத்திற்காக, 32 வயது K Alagesan என்ற அந்த இந்திய பிரஜைக்கு 38 ஆண்டுக்கால சிறைத்தண்டனை மற்றும் 15 பிரம்படி விதிக்க நீதிபதி Norsharidah Awang உத்தரவிட்டார்.

குற்றச் சாட்டப்பட்டிருக்கும் K Alagesan, நீதிபதி Norsharidah முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் சிறை மற்றும் 12 முதல் 24 வரை பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி Petaling Jaya - வில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பாதிக்கப்பட்ட Sugan Ganesan அறையில் நன்கு உறங்கி கொண்டிருந்த வேளை, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் K Alagesan அவரை தலையில் பலமுறை சுத்தியால் அடித்து கொலை புரிந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்