புத்ராஜெயா, ஆகஸ்ட்.11-
கடந்த 2008 ஆம் ஆண்டு தனது பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தொடர்பில் தனது முன்னாள் கணவரைக் கைது செய்யத் தவறியது, பிள்ளையைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றது தொடர்பில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோருக்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஸைனி மஸ்லான், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினரின் வாதங்களையும் ஆராய்வதற்கு தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஐஜிபி, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.








