Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

Share:

கோத்தா பாரு, மார்ச்.22-

கடந்த வெள்ளிக்கிழமை கிளந்தான், தானா மேரா, புக்கிட் புங்காவில் நிகழ்ந்த சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே வாகனம் மற்றும் கார் இடையிலான விபத்து குறித்து இன்னும் முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தானா மேரா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முஹமட் ஹாக்கி அஸ்புல்லா கூறுகையில், தடயவியல் பகுப்பாய்வு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலம் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.

சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களையும், ஸ்கிரீன்ஷாட்களையும் (Screenshots) பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவை இந்த விபத்தோடு தொடர்புடையவை அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.

போலீஸ் துறை அவசரமாக முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுத்துள்ளார். தற்போதைய தகவல்கள் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை என்பதையும் ஹாக்கி ஹஸ்புல்லா விளக்கினார்.

அதே வேளையில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

Related News