Jul 22, 2026
Thisaigal NewsYouTube
மானிய விலையிலான சமையல் எண்ணெய் விற்பனை: இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
தற்போதைய செய்திகள்

மானிய விலையிலான சமையல் எண்ணெய் விற்பனை: இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்

Share:

மானிய விலையிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டை விற்பனை செய்தது மற்றும் வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளில் இருவரும் கைது செய்யப்பட்டு இன்று பினாங்-பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

சிம்பாங் அம்பாட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில், கட்டுப்படுத்தப்பட்ட 1 கிலோ மானிய விலையிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டை கடை உரிமையாளர் முஹம்மது அன்வர் கார்த்திபன் என்பவர் பங்களாதேசியர் நாட்டைச் சேர்ந்த எம். ரோஷிதுல் மலித்தா என்பவருக்கு விற்பனை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிபதி ரோஸ்லான் ஹமீட் அவ்விருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் பிணை விதித்து தீர்ப்பளித்ததுடன், மாதந்தோறும் பினாங்கு அரச அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related News