Sep 27, 2026
Thisaigal NewsYouTube
புனே விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
தற்போதைய செய்திகள்

புனே விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

Share:

இந்தியா, மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையத்தில், நேற்று வெள்ளிக்கிழஐம இரவு சுமார் 10.25 மணியளவில் இந்திய விமானப்படை விமானம் ஒன்று தரையிறங்கும் போது அதன் சக்கரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ஓடுபாதையிலேயே நின்றதால், பாதுகாப்பு கருதி விமான நிலையத்தின் ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது.

இந்த திடீர் தடையால் இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சுமார் 34 புறப்பாடு மற்றும் 31 வருகை விமானங்கள் என மொத்தம் 70-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் மற்றும் விமானப்படை அதிகாரிகள் முன்னிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானம் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, ஓடுபாதை சீரமைக்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் புறப்பாடு சேவைகளும், 8.00 மணி முதல் வருகை சேவைகளும் மீண்டும் தொடங்கின. விமானப்படை ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், பொதுச் சொத்துகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புனே விமான நிலையம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்