Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாகிஸ்தான் நபர் கைது
தற்போதைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாகிஸ்தான் நபர் கைது

Share:

கெடா, பாடாங் செராய் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வெளிநாட்டு நபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 3 மணியளவில், தாமான் ரியா பகுதியில் உள்ள கடைக்குச் சென்ற சிறுமிக்கு அங்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் நடந்துள்ளன. இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.

கூலிம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், பினாங்கு, தாசேக் குளுகோர் பகுதியில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் அன்று இரவே கைது செய்யப்பட்டார் என்று கூலிம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி தெங்கு முகமது பைசல் தெங்கு எங் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அவர் மீதான முதற்கட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மேல் விசாரணைக்காகச் சந்தேக நபரை 6 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தெங்கு முகமது பைசல் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்