Sep 27, 2026
Thisaigal NewsYouTube
3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை

Share:

கிள்ளான், பண்டமாரான் பகுதியில் சட்டவிரோதமாக மானிய டீசலை கடத்த முயன்ற கும்பலை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அதிகாரிகள் முறியடித்தனர்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் கிள்ளான், பண்டமாரான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 'பாண்டட்' ரக லாரி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது லாரியின் பின்புறத்தில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 ராட்சத கொள்கலன்கள் இருப்பதையும், அதில் 3,400 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர் என்று அமைச்சின் மாநில அமலாக்க தலைமை அதிகாரி முகமட் ஹனிசாம் பின் கெச்செக் தெரிவித்தார்.

அங்கிருந்து தப்பியோட முயன்ற 30 வயதுடைய மலேசிய ஓட்டுநரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் டீசலை எடுத்துச் செல்வதற்கான எவ்வித முறையான ஆவணங்களும் இல்லை. லாரி, டீசல் மற்றும் எரிபொருள் மாற்றப் பயன்படுத்தப்பட்ட பம்புகள் என மொத்தம் 1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய 20,000 ரிங்கிட் மானியத் தொகை காப்பாற்றப்பட்டுள்ளது என்றுமுகமட் ஹனிசாம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்