Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆலயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு: பேராக் அரசு உறுதி - டத்தோ அ. சிவநேசன்
தற்போதைய செய்திகள்

ஆலயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு: பேராக் அரசு உறுதி - டத்தோ அ. சிவநேசன்

Share:

பேராக் மாநிலத்தில் ஆலயங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க மாநில அரசு உறுதியாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

பழைய காலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களே தற்போதைய சட்டச் சிக்கல்களுக்குக் காரணம் என்றார். ஆலயங்களை உடனடியாக அகற்றுவதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் அனுமதி அல்லது மாற்று இடங்களை அரசு வழங்கி வருவதாக அவர் விளக்கினார்.

இதற்குச் சான்றாக, பாகான் டத்தோ, ஜெண்டராட்டாவில் அ மையவுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை டத்தோ சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

ஜெண்டராட்டா பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் செலவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு பேராக் மாநில அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது என்பதை டத்தோ சிவநேசன் விளக்கினார்.

நேற்று பேரா மாநில அரசு செயலக கட்டட அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் ஓம்ஸ்.தியாகராஜனுடன் இயக்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ அ.சிவநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு அனுமதி வாங்கித் தந்த ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனுக்கு ஆலயப் பொறுப்பாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்