அடுத்த பொதுத்தேர்தலில் தான் கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக வெளிவந்த செய்திகளை முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் மறுத்துள்ளார்.
மறைந்த தனது மாமனாரும், கெப்பாலா பத்தாஸ் தொகுதியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, தனது அரசியல் வாரிசான ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன்னே கெப்பாலா பத்தாஸ் தொகுதியைக் கவனிக்கட்டும் என முன்பே தனக்கு அறிவுறுத்தியதாக கைரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது விருப்பத்திற்கு எதிராக தன்னால் எப்படி செயல்பட முடியும்? என்றும் கைரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மாலை பெர்தாம் பகுதியில் ரீசல் மெரிக்கன் நடத்திய ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, கைரி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








