மது போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் தந்தை ஒருவரை அவரின் மகன் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.45 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டி'அம்பாங் கோட்டா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 49 வயது நபர், உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இக்கொலை தொடர்பில் 26 வயதுடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த இளைஞர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே எந்தவொரு போலீஸ் குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவத்தார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


