Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு சமூக நல அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு சமூக நல அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

குவாந்தன்,அக்டோபர் 14-

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 78 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக பகாங், ரவுப் சமூக நல இலாகாவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் குவந்தான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

41 வயதுடைய தெங்கு அஸ்ரஃப் ஷா தெங்கு யாஹ்யா மற்றும் ஜுரைனி அப்துல் ரஹ்மான் என்ற அந்த இரு அதிகாரிகளும் நீதிபதி சஸ்லினா சாஃபி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →