Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கார் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது, ஆடவர் உயிர்தப்பினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது, ஆடவர் உயிர்தப்பினார்

ஜொகூர் , செப்டம்பர் 14-

Perodua Alza ரக கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இச்சம்பவம் இன்று காலையில் ஜோகூர் ,கோத்தா டிங்கி, தமன் செரி சௌஜானா அருகில் ஜாலான் கோத்தா டிங்கி - ஜோகூர் பாரு சாலையில் நிகழ்ந்தது.

இதில் கோத்தா பெசாரிலிருந்து தாமான் ஜோகூர் ஜெயாவை நோக்கி சென்று கொண்டிருந்த 26 வயது நபர், சாலையை தேங்கி நின்ற நீரை காரில் மோதியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததில் தீப்பிடித்துக்கொண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.

கார் ஓட்டுநரை தவிர பயணிகள் யாரும் காரில் இல்லை. இதில் கார் தீப்பிடிப்பதற்குள் ஓட்டுநர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →