Oct 30, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு 2027 வரவு செலவுத் திட்டம்: வரலாறு காணாத குறைந்த பற்றாக்குறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு 2027 வரவு செலவுத் திட்டம்: வரலாறு காணாத குறைந்த பற்றாக்குறை

பினாங்கு மாநிலத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 52 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மட்டுமே பற்றாக்குறையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், மாநிலச் சட்டமன்றத்தில் 107 கோடியே 40 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது இதனைத் தெரிவித்தார்.

மாநில வருவாய் 106 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பினாங்கு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்யவுள்ளது.

இதற்கிடையில், மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்திற்குச் சமமான சிறப்பு நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ-செஜாஹ்தெரா உதவித் திட்டத்திற்கு 5 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டும், சமமான பொருளாதார வாய்ப்புக்கான உதவித் திட்டத்திற்கு 80 லட்சம் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →