நேபாளம் - திபெத் வெள்ளப் பேரிடரில் உயிரிழந்த மலேசியர்களின் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு, நவம்பர் 4ஆம் தேதி சொக்சோ நிதியுதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மலேசிய குடும்பங்களுக்கான நம்பிக்கை ஒற்றுமை அமைப்பான மஸ்ஃபியின் (MASFIH) ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.
கடந்த 29ஆம் தேதி முதல், தகுதியுள்ள குடும்பங்களைச் சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு தொடர்புகொண்டு வருவதாகவும், நிதியுதவிக்கான ஆவணங்களைச் சேகரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குடும்பங்களின் தொடர்பு விவரங்களைத் திரட்டுவதில் மஸ்ஃபி உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட 54 மலேசியக் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுக்காக மஸ்ஃபி காத்திருப்பதாகவும் மணிவண்ணன் தெரிவித்தார்.








