பெர்லிஸ் ஆராவிலிருந்து அலோர் ஸ்டார் நோக்கிச் சென்ற கே.டி.எம்.பி ரயிலின் பெட்டிக் கண்ணாடி உடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு புகார் கிடைத்ததாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் மோஹ்சின் முஹமட் ரோடி தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது, திடீரென வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், பின்னர் ரயில் கண்ணாடி சேதமடைந்திருப்பதைக் கண்டதாகவும் பயணிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதற்கிடையில், சேதமடைந்த கண்ணாடியைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கே.டி.எம்.பி. தெரிவித்துள்ளது.
மேலும், ரயில் சொத்துகளைச் சேதப்படுத்தும் செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.








