Oct 30, 2026
Thisaigal NewsYouTube

தென் கொரியாவிடமிருந்து முதல் இரு எஃப்எ-50எம் போர் விமானங்களைப் பெற்றது மலேசியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தென் கொரியாவிடமிருந்து முதல் இரு எஃப்எ-50எம் போர் விமானங்களைப் பெற்றது மலேசியா

தென் கொரியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட முதல் இரு எஃப்எ-50எம் (FA-50M) இலகுரக போர் விமானங்கள் மலேசியாவை வந்தடைந்துள்ளன.

தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் இன்று லாபுவான் விமானப்படைத் தளத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டார். இவ்விமானங்கள் தென் கொரியாவின் சசியோன் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டன.

மொத்தம் 18 எஃப்எ-50எம் விமானங்களை வாங்க மலேசியா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் ஆறு விமானங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள விமானங்கள் 2028ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில், 2028ஆம் ஆண்டில் ஹாவ்க் போர் விமானங்களின் சேவையை நிறுத்துவதற்கான திட்டமும் உள்ளது.

மேலும், நாட்டின் வான்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்த இரண்டாவது கட்டமாக நவீன போர் விமானங்களைக் கொள்முதல் செய்வது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக காலிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →