உள்நாட்டு ஊடகத் துறையின் மாற்றத்தையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் நோக்கில், மீடியா இன்னோவேஷன் ஃபன் 2.0 எனும் புத்தாக்க நிதித் திட்டத்திற்கு அரசாங்கம் 3 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல், புத்ராஜெயாவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
ஊடகப் பணியாளர்களுக்கான பயிற்சி, மென்பொருள் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு, சாதனங்கள் கொள்முதல், உள்ளடக்க ஆய்வு மற்றும் மேம்பாடு ஆகிய நான்கு பிரிவுகளுடன், செய்திச் சேவைகள் மற்றும் ஊடக உள்ளடக்கங்களுக்கான சந்தா என்ற புதிய பிரிவும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தம் ஐந்து பிரிவுகளில் நிதி உதவி வழங்கப்படும்.
முந்தைய திட்டத்தின் கீழ் 72 ஊடக நிறுவனங்கள் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி உதவி பெற்றதாக ஃபாஹ்மி தெரிவித்தார்.








