பெட்டாலிங் ஜெயா, ஜூலை.15-
நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்து இருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
மலாய் ஆட்சியாளர்களின் சமஸ்தானபதிகள் மாநாடு இன்று தொடங்கியுள்ள வேளையில் புதிய தலைமை நீதிபதியின் நியமனம் தொடர்பாக ஆட்சியாளர்களின் அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது.
அந்த அங்கீகாரம் கிடைத்தப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் அது குறித்து விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடுவார் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்தார்.








