Dec 5, 2025
Thisaigal NewsYouTube
புலியைத் தொடர்ந்து குவா மூசாங்கில் யானையால் தொல்லை
தற்போதைய செய்திகள்

புலியைத் தொடர்ந்து குவா மூசாங்கில் யானையால் தொல்லை

Share:

குவா மூசாஙகில், புலியின் நடமாட்டத்தைத் தொடர்ந்து யானையின் அச்சுறுத்தலும் ஆரம்பித்துள்ளதாக அங்கு வசித்து வரும் மக்கள் கூறிகின்றனர்.

குவா மூசாங், கம்புங் கெலைக், போஸ் ப்ளூ பகுதியில் யானை நுழைந்ததில் அங்கு வசித்து வரும் தெமியார் இனத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பூர்வக் குடி மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.

கடந்த புதன்கிழமையன்று முதன் முதலில் அப்பகுதிக்கு வந்த யானை, அங்கு வசித்து வரும் பூர்வக் குடி மக்களின் விளைச்சலை நாசப்படுத்தியது. மீண்டும் மறு நாள் மாலை 5 மணி அளவில் அதே யானை அப்பகுதிக்கு வந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதனால், அங்கு வசித்து வந்த 24 குடும்பங்கள் , அருகில் உள்ள குவா முசாங்-லோஜிங் சாகைக்கு தப்பி ஓடிய அவர்கள், யானை அப்பகுதியை விட்டுச் சென்று விட்டதை உறுதி செய்த பின்னர் அதிகாலை 3.00 மணிக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அந்த யானை சில வீடுகளில் புகுந்து சேதம் விளைவித்திருந்தது.

அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வனவிலங்கு பாதுகாப்பு இலாகா உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்குலு போஸ் ப்லௌ, சலே அங்கா கூறினார்.

Related News