கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இந்து சமயம் சார்ந்த வழிபாடுப் பொருட்களின் விலை 56 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாக பினாங்கு இந்து இயக்கம் பிஎச்ஏ வும் பினாங்கு பயனீட்டாளர் சன்கமும் தெரிவித்துள்ளன.
இவ்வாண்டு தீபாவளிக்குப் பிறகு, கந்த சஷ்டியை நவம்பர் 18 ஆம் தேதியும் கார்த்திகை தீபத்தை நவம்பர் 26 ஆம் தேதியும் தைப்பூசத் திருவிழாவை அடுத்த ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியும் இந்து மக்கள் கொண்டாட இருக்கிறார்கள்.
இந்நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்பால் பி40 பிரிவைச் சேர்ந்த இந்து மக்கள் அவதியுறுகிறார்கள் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிர்வு அதிகாரி என்வி சுபாராவு உம், பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் பி முருகையாவும் தெரிவித்தனர்.
பினாங்குத் தீவிலும் செபராங் பிறையிலும் மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வில், 18 வழிபாட்டுப் பொருட்களின் விலை அதிகரிப்பைச் சந்தித்துள்ளதாக அவ்விரு அமைப்பும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
அந்த பொருட்களில் சூடம், பன்னீர், மல்லிகை, தாமரை மலர், சாம்பிராணி, தூபம், வெற்றிலை பாக்கு, தேங்காய், விளக்குகள் ஆகியவை அடங்கும்.








