Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.28-

ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஜோகூர் அரண்மனை சார்பில், மூவார், ஜோகூர் பாரு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சுமார் 2000 பொதிகள் பூபூர் லம்பூக் என்றழைக்கப்படும் “நோன்புக் கஞ்சியானது” விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25 மற்றும் 27-ஆம் தேதிகளில், அரண்மனை நிர்வாகி Faizol Abdullah, மாவட்ட அதிகாரிகளிடம், நோன்புக் கஞ்சி அடங்கிய பொதிகளை வழங்கினார்.

அப்பொதிகளானது, உதவிகள் தேவைப்படும் இஸ்லாமியர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நோன்புக் கஞ்சி விநியோகமானது, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் ரமலான் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டமானது, உதவி தேவைப்படும் மக்களின் நலன்களில் சுல்தானின் அக்கறையை வெளிப்படுத்துவதோடு, ரமலான் மாதம் முழுவதும் ஒற்றுமை மற்றும் கருணை உணர்வை வளர்ப்பதாக மாமன்னரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்