Oct 2, 2026
Thisaigal NewsYouTube

36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு

புத்ராஜெயா, நவம்பர்.15-

மொத்தம் 3.1 மில்லின் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

பத்து அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னாள் அமலாக்க அதிகாரி என 11 பேர் சம்பந்தப்பட்ட 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மறுகட்டமைப்புத் திட்டத்தின் வாயிலாக அவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இந்த பத்து அமலாக்க அதிகாரிகளும் பணி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் அதிகாரியும் லஞ்சம் பெற்று வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

தவிர, நான்கு கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், தங்கப் பாலங்கள், நான்கு சங்கிலிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →