Oct 16, 2026
Thisaigal NewsYouTube

5 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யக் கோரி, பெர்சத்து கட்சி, சட்ட நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
5 நாடாளுமன்றத் தொகுதிகளை காலி செய்யக் கோரி, பெர்சத்து கட்சி, சட்ட நடவடிக்கை

கோலாலம்பூர், நவ. 18-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தங்கள் ஆதரவு தெரிவித்தது மூலம் கட்சியின் நிலைப்பாட்டை புறக்கணித்து இருப்பதாக கூறப்படும் பெர்சத்து கட்சியின் முன்னாள் உறுப்பினர்களான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை காலி செய்யக்கோரி அக்கட்சி நீதிமன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

அந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டியதில்லை என்று அறிவித்து இருக்கும் நாடாளுமன்ற சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துலை இலக்காக கொண்டு பெர்சத்து கட்சி கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

அந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். கட்சியின் அமைப்பு விதியின்படி அந்த ஐந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்தாக வேண்டும். ஆனால், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை நிலைநிறுத்தி இருக்கும் சபா நாயகர் அப்துல் ஜோஹாரியை முன்நிறுத்தி டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி இந்த வழக்கை தொடுத்துள்ளது.

புக்கிட் கந்தாங், ஜெலி, குவா மூசாங், கோல கங்சார் மற்றும் தஞ்சோங் காராங் ஆகிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வழக்கின் பிரதிவாதிகளாக பெர்சத்து கட்சி தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →