Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஊட்டச்சத்து மருந்து உட்கொண்ட பெண் இறந்தது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஊட்டச்சத்து மருந்து உட்கொண்ட பெண் இறந்தது தொடர்பில் விசாரணை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.09-

சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த suplement எனப்படும் ஒரு குறிப்பிட்ட உடல்நல ஊட்டச் சத்து மாத்திரையை உட்கொண்டதால் ஒரு பெண் இறந்ததாக வந்த அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு குறித்து சுகாதார அமைச்சு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், சருமத்தை வெண்மையாக்க உதவும் என்று கூறப்பட்ட அந்தப் பொருளில், 'தடை செய்யப்பட்ட பட்டியலில்' உள்ள Glutathione இருப்பதை உணவு பாதுகாப்பு, தரத் திட்டம் வாயிலாக உறுதிச் செய்துள்ளது.

இந்தச் suplement, இணையம் வாயிலாகவும் சமூக ஊடகங்களிலும் விற்பனை செய்யப்படுவது, மலேசிய உணவுச் சட்டம் 1983-இன் விதிகளுக்கு எதிரானது என்பதால், அதன் உற்பத்தியாளர்களையும் விநியோகத்தையும் கண்டறிய விரிவான விசாரணை நடைபெறுகிறது. இவ்விவகாரம் குறித்த உண்மைத்தன்மையை உறுதிச் செய்வதற்கும், அந்தப் பொருளின் உள்ளடக்கங்கள், Labelling இணக்கங்களைச் சரிபார்க்கவும் PKKM தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Related News