Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் 8 பொருட்கள் ! - இடைக்கால அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் 8 பொருட்கள் ! - இடைக்கால அமைச்சர் தகவல்

Share:

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 9 முதல் 15 ஆம் தேதி வரையில் பெருநாள் கால உச்சவரம்பு விலைக் கட்டுபாட்டுப் பட்டியலில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், பருப்பு ஆகியன உட்பட 8 முக்கியமான சமையல் பொருட்கள் இடம் பெற்றுள்ளன என உள்நாடு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் இடைக்கால அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பின்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறிய வெங்காயம், சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி, துருவிய தேங்காய், தக்காளி ஆகிய பொருட்களும் இந்த விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் இடம் பெறுகின்றன.

முழு தேங்காய்கள் மட்டும் மொத்த விற்பனை நிலையில் விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
இந்தப் பொருட்களின் விலைகளை அமைச்சின் இணையப்பக்கமான KPDM dot GOV dot MY வாயிலாக பொது மக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இப்பொருட்களின் விலை விவகாரம் குறித்து பொது மக்கள் புகார் அளிக்க விரும்பினால், அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் நேரடியாகத் தங்கள் புகாரை அனுப்பலாம் எனவும் அஃது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட இலகுவாக இருக்கும் எனவும் அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

Related News