கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.18-
‘ஜாலூர் கெமிலாங்’ சர்ச்சை தொடர்பில் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, சபா மாநிலத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று எல்டிபி எனப்படும் ஜனநாயக லிபரல் கட்சி, சபா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
அக்மாலின் நடவடிக்கைகள், அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ உரிமையைக் கொண்டுள்ள சபா மக்களின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கி விடும் என்று அக்கட்சியின் தலைவர் சின் சூ பின் தெரிவித்துள்ளர்.
சபாவில் மீண்டும் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் நபர்கள் சபாவிற்கு நுழைந்து கலவரத்தை ஏற்படுத்துவதற்கான விதைகளை விதைக்க அனுமதிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
சபா முதலமைச்சர் ஹஜிஜி நோர் தலைமையிலான சபா அரசாங்கம், அக்மால் மாநிலத்திற்குள் நுழைவதை உடனடியாகத் தடுக்க மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எல்டிபி வலியுறுத்துவதாக சின் சூ பின் கோரிக்கை விடுத்தார்.








