Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கம்பாரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கம்பாரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

ஈப்போ, மே.02-

ஈப்போ–கோலாலம்பூர் சாலையின் கிலோமீட்டர் 29.4 -இல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இரண்டு கார்கள் மற்றும் ஒரு Toyota Hilux சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், Hilux வாகனத்தை ஓட்டிய 44 வயதுடைய நபர், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இரவு சுமார் 10.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஸ்ரி டாவுட் தெரிவித்துள்ளார்.

கம்பாரைச் சேர்ந்த சுயதொழில் புரியும் அந்நபர், ஈப்போவிலிருந்து கம்பார் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப் பாதையில் புகுந்ததாக நம்பப்படுகிறது.

Related News