Sep 14, 2026
Thisaigal NewsYouTube
2,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் மெகா ஐலிண்டுங்யு திருவிழா
தற்போதைய செய்திகள்

2,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுடன் மெகா ஐலிண்டுங்யு திருவிழா

Share:

மெகா ஐலிண்டுங்யு திருவிழா வரும் செப்டம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை கோத்தா டமன்சாராவில் உள்ள ஸ்ராண்ட் பேரங்காடியில் நடைபெறுகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ராமணன் ராமகிருஷ்ணன் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் புதிய சின்னத்தையும் அறிமுகப்படுத்த உள்ளார்.

சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ ஏற்பாடு செய்யும் இவ்விழாவில், 60 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கெசுமா பெர்சாமா ரக்யாட் என்ற திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெறலாம்.

மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு உள்ளிட்ட மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மித்ரா, எச்ஆர்டி கோர்ப், தெலண்ட்கோர்ப், நியோஷ் உள்ளிட்ட11 அமைப்புகள் இதில் பங்கேற்கின்றன.

மேலும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்காக 25 நிறுவனங்களுடன் வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்படுகின்றது.

இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுடன், இலவச சுகாதாரப் பரிசோதனை, பங்களிப்பு விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

அதேவேளையில், உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், குடும்பத்தினருக்கான போட்டிகள், பிரபலங்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

Related News

பகாங்கில் இவ்வாண்டில் நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பகாங்கில் இவ்வாண்டில் நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ரேலா உறுப்பினர்களுக்கான புதிய மணிநேர கொடுப்பனவு – கேடிஎன், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை

ரேலா உறுப்பினர்களுக்கான புதிய மணிநேர கொடுப்பனவு – கேடிஎன், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் விடுதலை

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் விடுதலை

போலீஸ் படைத் துணைத் தலைவராக அப்துல் அஸிஸ் அப்துல் மாஜிட் நியமனம்

போலீஸ் படைத் துணைத் தலைவராக அப்துல் அஸிஸ் அப்துல் மாஜிட் நியமனம்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் – பாஸ் வலியுறுத்து

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் – பாஸ் வலியுறுத்து

2027 வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தில் – நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா  அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தில் – நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அறிவிப்பு