Sep 14, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் விடுதலை
தற்போதைய செய்திகள்

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவன் விடுதலை

Share:

கடந்த ஆண்டு பண்டார் உத்தாமா பள்ளியில் 16 வயது சக மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 15 வயது மாணவரை, ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் இன்று குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது.

குற்றம் நடந்த போது அச்சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், நீதிபதி அட்லின் அப்துல் மாஜிட், சிறுவனை சிலாங்கூர் சுல்தான் விருப்பத்திற்கிணங்க காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அவர் பேரா பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அச்சிறுவனின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங், கொலை நடைபெற்ற நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் தாம் செய்த செயலின் தன்மையை புரிந்து கொள்ளவோ அல்லது அது சட்டத்திற்கு எதிரானது என்பதை அறிந்து கொள்ளவோ இயலாத நிலையில் இருந்ததை தற்காப்புத் தரப்பு நிரூபித்ததையடுத்து, நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related News

ரேலா உறுப்பினர்களுக்கான புதிய மணிநேர கொடுப்பனவு – கேடிஎன், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை

ரேலா உறுப்பினர்களுக்கான புதிய மணிநேர கொடுப்பனவு – கேடிஎன், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை

போலீஸ் படைத் துணைத் தலைவராக அப்துல் அஸிஸ் அப்துல் மாஜிட் நியமனம்

போலீஸ் படைத் துணைத் தலைவராக அப்துல் அஸிஸ் அப்துல் மாஜிட் நியமனம்

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் – பாஸ் வலியுறுத்து

நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் – பாஸ் வலியுறுத்து

2027 வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தில் – நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா  அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தில் – நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அறிவிப்பு

நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை - விஸ்மா புத்ரா அறிவிப்பு

நேபாள பேரிடரில் மாயமான 55 மலேசியர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை - விஸ்மா புத்ரா அறிவிப்பு

மலேசியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டவர்களும் வேலைக்கான அனுமதி பெற வேண்டும்: குடிநுழைவுத் துறை

மலேசியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டவர்களும் வேலைக்கான அனுமதி பெற வேண்டும்: குடிநுழைவுத் துறை