2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் நிறைவடையும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
தொழில்துறையினர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள், 2027 வரவு செலவுத் திட்டத்தில் பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கு இந்த ஆலோசனைகள் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலோசனைகளின் மூலம் பெறப்பட்ட பரிந்துரைகளானது, 2027 வரவு செலவுத் திட்டத்தில் சேர்ப்பதற்காக மதிப்பீடு செய்யப்படும் என்றும், மேலதிக ஆய்வு தேவைப்படும் முன்மொழிவுகள் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து பரிசீலிக்கப்படும் என்றும் அமீர் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்துறையினர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் கருத்துகள் மூலம் 2027 வரவு செலவுத் திட்டம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும் அமையும் என்று அமீர் ஹம்ஸா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.








