May 5, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி
தற்போதைய செய்திகள்

ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எல்ஆர்டி3 ஷா ஆலம் ரயில் சேவை, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அனைத்து சோதனைகளும் சுமூகமாக முடிந்தால், ஏப்ரல் மாதத்திலேயே இந்தச் சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக அக்டோபர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான கூடுதல் சோதனைகளால் தள்ளிப் போனது.

குறிப்பாக, ஒரு ரயில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதுமின்றி 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய 'பிழையற்ற ஓட்டம்' சோதனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா முதல் கிள்ளான் ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட எல்ஆர்டி3 ரயில் வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்