ஹரிராயா பெருநாளை முன்னிட்டு ஒரு நாள் கூடுதல் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது மூலம் உற்பத்தித் துறையைச் சேர்ந்தர்வர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அல்லது 100 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மலேசிய உற்பத்தித்துறை சம்மேளனத்தின் தலைவர் டான் டான் ஶ்ரீ சொஹ் தியான் லாய் தெரிவித்துள்ளார். சிறப்பு விடுமுறை வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை என்று ஒரு குத்துமதிப்பாக அரசாங்கம் அறிவித்து இருக்கக்கூடாது என்று சொஹ் தியான் லாய் குறிப்பிட்டார்.
இது போன்ற நடவடிக்கை அரசாங்கத்திற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக, நாட்டின் உற்பத்தித்துறை வெகுவாக பாதிக்கும் என்பதுடன் வணிகர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்று அந்தச் சம்மேளனத்தின் தலைவர் விளக்கினார்.
உற்பத்தியில்லாத இந்த ஒரு நாள் சிறப்பு விடுமுறையினால் வேலை வழங்கப்படாமலேயே தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட 70 கோடி வெள்ளியை தொழிற்சாலைகள் சம்பளமாக வழங்க வேண்டியுள்ளது என்பதுடன் மொத்தம் 100 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொஹ் தியான் லாய் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


