Dec 5, 2025
Thisaigal NewsYouTube
போலி விசா: 7 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

போலி விசா: 7 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

மலேசியாவிற்குள் நுழைவதற்குப் போலி விசாவைப் பயன்படுத்திய 7 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த 7 ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததை, விமான நிலையத்தின் எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த எழுவரின் கடப்பிதழ்களும் சோதனையிடப்பட்டதில் அது போலியான விசா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு சிறார்களை உள்ளடக்கிய அந்தக் கும்பல், உஸ்பெகிதான் நாட்டிலிருந்து மலேசியாவின் போலி விசாவைப் பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஈரானிலிருந்து தப்பித்து வந்ததாக கூறும் அந்த 7 ஆப்கானிஸ்தான்காரர்களுக்கு தங்கள் பயணத்தின் கடைசி இலக்கு மலேசியா என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த ஏஜென்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News