Jul 31, 2026
Thisaigal NewsYouTube
திட்டமிடப்படாத நீர் விநியோகத் துண்டிப்பு
தற்போதைய செய்திகள்

திட்டமிடப்படாத நீர் விநியோகத் துண்டிப்பு

Share:

ஷா ஆலம், ஆகஸ்ட் 24-

ஹுலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்னம் ஆகிய மாவட்டங்களில் ஒரு பகுதியில் மட்டும் இன்று சனிக்கிழமை திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் சுங்கை பெர்னாம் நதியிலிருந்து ஏற்பட்ட நீர்பெருக்கின் காரணமாக சுத்திகரிக்கப்படாத நீரின் அளவு மேலோங்கியுள்ளது.

இதன் விளைவாக நீர் மாசுப்பாடு ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக Sungai Bernam நீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தின் பிரதான நீர் விநியோகிப்பு நிறுவனமான Air Selangor இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டேங்கர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related News