Sep 29, 2026
Thisaigal NewsYouTube
7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

7 மாநிலங்களில் 10 இடங்களில் காச நோய் தொற்று - சுகாதாரத்துறை அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

7 மாநிலங்களில் 10 இடங்களில் புதிதாக காச நோய் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அவற்றில் சிலாங்கூரில் 4 இடங்களில் புதிதாக நோய் தொற்றுப் பரவி, பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் மாநிலத்தில், ஒரே பகுதியில், 37 பேருக்கும், கெடா, கிளந்தான் மாநிலங்களில் ஒரே பகுதியில் இரண்டு பேருக்கும் காச நோயானது பரவியுள்ளதாகவும் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பகாங், பெர்லிஸ், ஆகிய மாநிலங்களில் ஒரே பகுதியில் இருவருக்கு காச நோய் பரவியுள்ளது.

மேலும், சபா மாநிலத்திலும் ஒரே பகுதியில் 5 பேருக்கு காச நோய் பரவியுள்ளதாக ஸுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

Related News