Apr 3, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர், துணை இயக்குநருக்கு எதிராக 1 லட்சத்து 21 ஆயிரம்  ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சுற்றுச்சூழல் தலைமை இயக்குநர், துணை இயக்குநருக்கு எதிராக 1 லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

Share:

சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் மற்றும் அவரது துணை அதிகாரிகளில் ஒருவரான நோர்ஹஸ்னி மாட் சாரி, ஆகியோர் 1 லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகி குற்றத்தை மறுத்துள்ளனர்.

நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் 1 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் மறுத்துள்ளார்.

58 வயதான அவர், கோர் சோங் ஹாய் தலைமையிலான நிறுவனத்திலிருந்து, அதன் திட்ட மேலாளர் லீ ஹாம் காங் மூலம், கடந்த 2025 -ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்த லஞ்சத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொது அதிகாரியாக பணியாற்றிய வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர்க்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விலக்கு கோரிக்கையை பரிசீலிக்க தூண்டுவதற்காக இந்த லஞ்சமானது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News